பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் முக்கிய காட்சிகளில் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜ்யசபா எம்பியாக இருந்தார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பலரும் பாஜகவில் ஐக்கியமாகி வரும் நிலையில், மிதுன் சக்கரவர்த்தி நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் இவர் கட்சியின் சேரும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.