Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி பசுமை அறிவியல் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கல்லுரிகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் பிப்ரவரி 25-ஆம் தேதி பசு அறிவியல் தேர்வு நடைபெறுகிறது. மத்திய அரசின் பால் மற்றும் கால்நடை துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்த தேர்வில் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என யூஜிசி அறிவித்துள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் இதுபற்றி விவரங்களுக்கு Kamdhenu.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |