Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் புகுந்து வேட்டை… விற்பனை செய்யும் போது சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் வனத்துறை அதிகாரிகள்…!!

மான் கறியை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள ராமநத்தம் காவல் நிலையத்திற்கு அங்குள்ள ஒரு கிராமத்தில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், அவர் மான்கறி விற்பனை செய்து கொண்டிருந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பெண்ணாடம் நரிக்குறவர் காலனி பகுதியில் வசித்து வரும் பிரபு என்பவர் ராமசாமிக்கு மான் கறியை கொடுத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்பின் போலீசார் பிரபுவை பிடித்து விசாரணை நடத்திய போது, அந்த வனப் பகுதிக்குள் புகுந்து மான் வேட்டையாடியதும், அந்த கறியை ராமசாமியிடம் விற்பனைக்காக கொடுத்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர்களை வனச்சரக அலுவலர் ரவி, வனக்காப்பாளர் சங்கர், சிவகுமார், வனக்காவலர் சிவானந்தம் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 10 கிலோ மான் கறியை பறிமுதல் செய்து விட்டனர்.

Categories

Tech |