புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீஸ் மீது கிருஷ்ணா தாக்குதல் நடத்தினார். அதனால் ஆத்திரமடைந்த போலீஸ் உடனே துப்பாக்கியை எடுத்து கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீரா என்பவரை எதற்காக கிருஷ்ணா கழுத்தை அறுத்தார் என்பது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.