புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு இடையே இருந்த மோதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரண்பேடி சார்பாக கூறப்பட்டுள்ளது என்னவென்றால், துணைநிலை ஆளுநர் என்ற பொறுப்பில் நான் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினேன். அதன் காரணமாகத்தான் மாநிலத்திலேயே எனக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பலமுறை எனக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள்.
மேலும் அரசியலமைப்புக்கு உட்பட்டு துணைநிலை ஆளுநர் ஆக தன்னுடைய கடமை செய்ததாகவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அப்பழுக்கற்ற வகையில் ஆளுநராக பணியாற்றியதாகவும், தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.