வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,கழிவுநீர் சுத்திகரிப்புகாக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.நாட்டில் உள்ள 74 சுற்றுலாத்தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்.சுய உதவிக்குழு பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.வங்கிகளில் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி முதலீட்டு மூலதனம் தரப்படும்.இந்திய கைவினைஞர்கள் தங்களது பொருட்களை உலகம் முழுவதும் விற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.வெளிநாட்டில் வாழ்ந்து இந்தியாவிற்கு திரும்பினால் ஆதார் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்,ஆதாரை பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்படும் என்று தெரிவித்தார் .