விண்வெளி வீரர்களுக்காக புதிய ஒரு உணவை கண்டுபிடித்து கூறுபவர்களுக்கு மிக பெரிய பரிசு காத்திருக்கிறது என்று நாசா அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களது பயணத்தின் போது ஏற்ற, பொருத்தமான, புதுமையான உணவுகளை அவர்களுக்கு அளிக்கும் வகையில் பொதுமக்கள் தயாரிப்பு முறைகளை கண்டுபிடித்துக் கூறினார் அவர்களுக்கு 5 லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது. இப்போட்டியில் வரும் மே 28-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஜூலை 30 க்குள் தாங்கள் கண்டுபிடித்துள்ள உணவின் விவரங்களை நாசாவிடம் தெரிவிக்க வேண்டும். இப்போட்டியில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். ஆனால் அவர்களுக்கு பரிசு கிடையாது என்று நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் ஏற்கனவே அதிக கலோரிகள் கொண்ட சாக்லேட் பார்களை உண்டு வருவது குறிப்பிடத்தக்கது.