12ஆம் வகுப்பு பொதுதேர்வானது மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய 6லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பள்ளிகளிலேயே தேர்வு என்பது நடைபெற இருப்பதை போல சட்டமன்றத் தேர்தலும், இந்த முறை கிட்டத்தட்ட 93 ஆயிரம் வாக்குச்சாவடி களுடன் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக கடந்த 11, 12ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் நீங்கள் மாணவர்களுக்கான தேர்வு எப்போது வைக்க திட்டமிட்டு உள்ளீர்கள் ? என்று தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினர்.
பொதுத்தேர்வு நடைபெறக்கூடிய காலகட்டங்களில் தேர்தல் நடைபெறாது. அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளியில்தான் தேர்தலுக்கான பூத் போடுவார்கள். அதனால் தேர்வு தேதியை கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரிகள் இருக்கக்கூடிய இடத்தில்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, திமுக மே மாதம் அதிகமாக வெயில் இருக்கும் பிரச்சாரம் செய்வதற்கு கஷ்டம், மக்கள் பொதுக்கூட்டங்கள் வருவதற்கு கஷ்டம். எனவே ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவித்துள்ள சூழலில் தமிழக தேர்தல் மே மாதம் 2ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.