Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு?…. வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதன்படி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை என்று அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் அதிகாரப்பூர்வ தேதி அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகின்ற மே 24-ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 234 தொகுதி சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன.

அதற்கான பணிகளில் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனையடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாகும். ஏப்ரல் கடைசி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவும், வாக்கு எண்ணிக்கை மே 10ஆம் தேதிக்குள் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |