இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை தண்டனையும் , 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சிறை தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்ற வைகோவின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் தண்டனையை ஒத்தி வைத்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ , இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று தெரிவித்தார்.