விஐ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் விஐ நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை FUP கட்டுப்பாடுகள் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டா வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 249 ரூபாய்க்கு அல்லது அதற்கு மேலுள்ள ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த டேட்டா வழங்கப்படும் என கூறியுள்ளது.