எபோலோ பரவல் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஆறு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2013-2016 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான கொடிய தொற்று நோயாக எபோலா பரவல் இருந்தது. சிரியா, லியோன் மற்றும் லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தத் தொற்று நோய் காரணமாக 14,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது காங்கோ நாட்டில் 300 பேருக்கும் கினியாவில் 109 பேருக்கும் எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
எபோலோ பரவலால் கினியா நாட்டில் 5 பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். இதனால் எபோலா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால் பிற ஆறு நாடுகள் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சியரா லியோன் மற்றும் லைபீரியா உள்ளிட்ட நாடுகள் இதற்கு முன் எபோலோ பரவலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாலி, பிசாவ் , செனகல் மற்றும் ஐவரிகோஸ்ட் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளது.