Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீஸ் டப்பாவாக இருக்க மாட்டோம்… கொத்தாக கிளப்பிய தம்பிகள்…. அதிர்ச்சியில் சீமான் …!!

ஈரோடு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி தலைமையில் இந்த இணைப்பு நடந்தது.பின்னர் மொத்தமாக செய்தியாளர்களை சந்தித்தவர்கள், நாம் தமிழர்  கட்சியில் அடிப்படை தமிழக ஜனநாயகமே கிடையாது.

நாம் தமிழர் கட்சியில் ஒரு தொகுதி வேட்பாளர் அறிவிக்கிறார்கள் என்றால் தொகுதி செயலாளர், மாவட்ட செயலாளர்களை கேட்பது கிடையாது. அறிவித்து விட்டு, வேலை செய்ய சொல்கிறார்கள். அவர்களுக்கு அடிமையாய் இருந்து வேலை செய்ய செய்ய முடியாது என்பதற்காக  திமுகவில் இணைந்தோம். இவர்கள் தான் வேட்பாளர் என்று சொல்ல மறுக்கின்றார்கள்.

அறிவித்ததும் வேலை செய்ய சொல்லுறாங்க, இல்லனா வெளியே போங்கன்னு சொல்லுறாங்க. ஆரம்பகட்ட காலத்திலிருந்தே இந்த கட்சியை வளர்ப்பதற்காக மிகக்கடுமையாக பாடுபட்டு உழைத்து இருக்கிறோம். எங்களின்  கருத்துக்களை கேட்பதில்லை என தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு என் பேச்சை கேட்க்கு கட்சிக்கு வேலை செய்யவில்லை என்றால் கிரிஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்துவிட்டு கடப்பேன் என சீமான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |