Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம்.

2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.

Image result for சிறப்பு நீதிமன்றம்

காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் உள்ளே இருந்தனர். அப்போது வைகோ_வுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும் , 10,000 ரூபாய் ஆபாரதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது வைகோ சார்பில்  தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தார்கள்.

Image result for சிறப்பு நீதிமன்றம்

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைகோவின் சிறை தண்டனையை 1 மதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சட்டப்படி தடை இல்லை. ஆனால் நடைமுறை சிக்கல் ஏற்படலாம் இயற்று நீதிபதி தெரிவித்தார். வைகோ தரப்பில் அபராத தொகை 10,000 உடனடியாக கட்டப்பட்டது.

Categories

Tech |