Categories
சினிமா தமிழ் சினிமா

‘வேற லெவல் சகோ’… சிவகார்த்திகேயனின் ‘அயலான்’…ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார் . மேலும் யோகி பாபு ,கருணாகரன், இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ‘அயலான்’ சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்தை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக படக்குழு தெரிவித்திருந்தது .இதையடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்தது .

கடந்த வருடம் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ‘அயலான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது . இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் 36 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘அயலான்’ படத்தின் முதல் பாடலான ‘வேற லெவல் சகோ’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது . ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார் . தற்போது ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |