பாம்பை கண்டால் படையும் நடுங்கும். அதுவும் விஷம் மிக்க நாக பாம்பு என்றால் எல்லோருக்கும் அதிக பயம் வரும். இந்த பாம்புகள் குளம் ,ஆறு போன்ற தண்ணீரில் இருந்தால் அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படும். அப்போது அந்த பாம்புகளிடம் நாம்சிக்கும்போது நமக்கு ஆபத்து அதிகம். இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கிணற்றில் ஆக்ரோஷமாக இருக்கும் பாம்பை தைரியமாக பிடித்து காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்கள் வைரலாக பரவியுள்ளது. பாம்பை படித்த இளைஞர்களின் இந்த வீடியோவை ஐஆர்எஸ் அதிகாரி நவீத் என்பவர் வெளியிட்டு பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “நீரில் மூழ்காமல் இருப்பதற்காக ஒரு விஷமிக்க பாம்பை காப்பாற்ற இளைஞர்கள் கிணற்றில் குதித்து தங்களுடைய உயிரை பணயம் வைத்து இவ்வாறு செய்தது மிகவும் போற்றத் தக்கது என்று கூறியுள்ளார்.
Man jumps into well to save a cobra from drowning. It's rare to see someone risk their own life like this. Very admirable. pic.twitter.com/fZF2UsQRlE
— Naveed Trumboo IRS (@NaveedIRS) February 16, 2021