Categories
தேசிய செய்திகள்

“புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி ” நிர்மலா சீதாராமன் பேச்சு …!!

புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார்.

இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார். அபோது பேசியவர் , உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார்.

Image result for நிர்மலா சீதாராமன்

தொடர்ந்து பேசிய அவர் , பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் . பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்து துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது .  2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன்  பேசி வருகின்றார்.

Categories

Tech |