Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அடிக்கிற வெயிலுக்கு இதமாக… ஜில்லுன்னு சாப்பிடணும் போல இருக்கா ? அப்போ இந்த ரெசிபிய… குழந்தைகளுக்கு செய்து கொடுங்க போதும்..!!

குல்ஃபி செய்ய தேவையான பொருட்கள்:

பால்                        – ஒரு கப்
பிஸ்தா                 – 3
பாதம் பருப்பு     – 2
குங்குமப்பூ         – சிறிதளவு
சர்க்கரை             – ருசிக்கேற்ப

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றியபின், அதில் குங்குமப்பூவை போட்டு சில மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பின்பு பிஸ்தா, பாதாம் பருப்களை எடுத்து, கேரட் துருவியில், பொடியாக துருவி எடுத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு கொதித்ததும், அதில் சர்க்கரையை போட்டு நன்கு கொதித்து பாதியாக வற்றும் வரை கரண்டியால் நன்கு கிளறி விடவும்.

மேலும் பால் நன்கு வற்றியபின், அதில் உற வைத்த குங்குமப்பூவை பாலோடு சேர்த்து, துருவிய பிஸ்தா, பாதாம் பருப்பை கொதிக்கின்ற பாலில் போட்டு நன்கு கொதிக்க வைத்து சில நிமிடம் கழித்து இறக்கி வைத்து ஆற வைக்கவும்.

இறுதியில் கொதித்ததும் ஆற வைத்த பால் கலவையை எடுத்து சிறிய கிளாஸ்களிலோ அல்லது குல்ஃபி ஐஸ் அச்சிகளிலோ ஊற்றி பிரிட்ஜில் வைத்தபின், 12  மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறினால், ருசியான  குல்ஃபி ரெடி.

Categories

Tech |