Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ஒரு அரசியலா?… மக்களை ஏமாற்ற நாடகம்… ஸ்டாலின் கண்டனம்…!!!

திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி அரசியல் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் புதுச்சேரி அரசியல் பற்றி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிக காலதாமதமாக அறிவிப்பு. கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியல் செய்ய அனுமதித்து, புதுச்சேரி வளர்ச்சியை முடக்கி போட்டிருந்தது பாஜக. மக்களை ஏமாற்ற கடைசிநேர கண்துடைப்பு நாடகம் இது” என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |