உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 38 பேருக்கு புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் நைஜீரியாவில் உருமாற்றம் அடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரோனா போன்று இந்த புதிய உருமாற்றம் அடைந்த நைஜீரிய கொரோனாவும் தடுப்பூசிகளை செயலிழக்க வைத்து விடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பிரிஸ்டல் என்ற பகுதியில் மட்டும் இதுவரை 36 நபர்களுக்கு உருமாறிய நைஜீரிய கொரோனா வைரஸ் பரவியது தெரியவந்துள்ளது . தற்போது நைஜீரிய கொரோனாவின் வீரியம் தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உலக அளவில் 100 பேருக்கு இந்த வகை கொரோனா பரவியுள்ளதாக எடின்பர்க் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே பிரிட்டனில் புதிய உருமாற்றம் அடைந்த நைஜீரிய கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்திலிருந்து தான் இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.