Categories
மாநில செய்திகள்

JustIn: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி… சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு பற்றி நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மே 24ம் தேதியுடன் அதிமுக ஆட்சிக் காலம் முடிவடைந்ததால், அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடு குறித்து நாளை மாலை 4 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார்.

Categories

Tech |