தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடன் அமெரிக்க மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முடிவடைவதற்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று உறுதி கூறியிருந்தார். மேலும் மே மாத இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்றும் ஜோ பைடன் முன்பு கணித்திருந்த நிலையில் அவரின் நம்பிக்கையை சமீபத்தில் வெள்ளை மாளிகை குறைத்துவிட்டது.
அதாவது தடுப்பூசி கிடைப்பதிலும் அவற்றை செலுத்துவதற்கான செயல்திறனிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை என்று அமெரிக்க மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி எப்போது செலுத்தப்படும் என்ற கேள்விக்கு, ஜோ பைடன் “இந்த வருடம் ஜூலை மாத இறுதிக்குள்” என்று பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, ஜூலை மாத முடிவில் சுமார் 600 மில்லியன் டோஸ்கள் நம்மிடம் இருக்கும்.
இது ஒவ்வொரு அமெரிக்க மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்த போதுமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, குழந்தைகள் பள்ளி செல்ல விரும்புவதால் ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் டவுன்ஹால் அமர்வில் அமெரிக்கர்களுடைய வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு எப்போது திரும்பும் என்ற கேள்விக்கு, “இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் நாம் அனைவரும் மிக மாற்றமடைந்த சூழ்நிலையில் இருப்போம் என்று நம்பிக்கை கூறியுள்ளார்.