ரஷ்யாவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த விலங்குகளின் உடல்கள் மூலம் புதிதாக வைரஸ்களை சேகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா என்ற ஒரு கொடூர வைரஸ் சீனாவில் இருந்து பரப்பப்பட்டதாக ஒரு செய்தி உலகமெங்கும் சென்றது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த ஆராய்ச்சியால் மேலும் உலக நாடுகளுக்கு மேலும் தீங்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் பழங்காலத்தில் உயிரிழந்த விலங்குகளின் மூலம் குளோனிங் செய்யும் ஒரு ஆய்வும் நடைபெற்று வருகிறது.
அறிவியலாளராக இருக்கும் Dr.Olesya Okhlopkova கூறுகையில், “பழங்காலத்து விலங்குகளின் உடலில் உள்ள வைரஸ்களை சேகரிப்பதற்காக இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்வது ஒருபுறமிருந்தாலும் விலங்குகளிலிலிருந்து நுண்ணுயிர்களை குளோனிங் மூலம் மீண்டும் உருவாக்குவது zombie போன்ற தொற்றுகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.