பிரிட்டன் பிரதமருக்கு தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் ஊரடங்கை எளிதாக்குவது குறித்து எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் திங்கட்கிழமை அன்று கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை தளர்த்துவதற்கான தன் திட்டத்தின் தேதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் தொற்று விகிதத்தினால் அவசியம் ஏற்படும் பட்சத்தில் திட்டங்களை தாமதப்படுத்துவதுவதற்கும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை, இறப்பு விகிதம் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கம் போன்ற தகவல்களை இந்த வாரத்தில் பிரதமர் சோதிப்பார் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டனில் இருக்கும் NHS அறக்கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் NHS providersனுடைய தலைமை நிர்வாகியாகயான கிரீஸ் ஹாப்சனே என்பவர் பிரதமருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் அதில் குறிப்பிட்டிருப்பதாவது, வரும் ஆறு வாரங்களுக்கு NHS கடுமையான நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார். அரசாங்கம் ஊரடங்கிலிருந்து வெளியேற்றும் திட்டத்தை செயல்படுத்தும்போது பிரதமர் போரிஸ் ஜான்சன் தேதிகள் மட்டுமின்றி இது குறித்த தகவல்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.