நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார்.
அதில் , அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து விமானத் துறை, ஊடகங்கள், அனிமேஷன் ஏ.வி.ஜி.சி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை மேலும் திறப்பதற்கான பரிந்துரைகளை அரசு வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும்.