நடிகர் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. அதன்பிறகு சில காலத்திலேயே அஜீத் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் முன்னணி கதாநாயகியாக ஷாலினி வலம் வந்தார் .நடிக்கும் போதே அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது.
பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஷாலினி திரையுலகிற்கு வரவே இல்லை. இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை ஷாலினி கட்டிப்பிடித்தபடி எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் அஜித் மற்றும் ஷாலினியின் ரொமான்ஸ் மிக அழகா தெரிந்தது. இந்தப் புகைப்படம் அஜித் ரசிகர்களுக்கிடையே மிக விரைவாக பகிரப்பட்டு வருகிறது.