Categories
தேசிய செய்திகள்

“வங்கி கணக்கு இல்லாததால்” இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்த…. 5 லட்சம் பணம் நாசம்…!!

ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர் பிஜிலி ஜமாலியா(58). பன்றி வியாபாரியான இவர் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் 5 லட்சம் பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவருக்கு வங்கி கணக்கு இல்லாததால் இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். இதையடுத்து வீடு கட்டுவதற்காக அந்த பணத்தை ஒருநாள் எடுக்கும்போது அனைத்தும் கரையான்கள் அரித்து நாசமாகி இருந்துள்ளது. இதைக்கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் பெரும் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் இப்படி ஆகிவிட்டதே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த பணம் தவறான வழி வந்ததில்லை என்றால் நிச்சயமாக அது திரும்ப உங்களுக்கு கிடைக்கும், உதவி அளிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாய் பணம் கரையான் அரித்து நாசமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |