Categories
தேசிய செய்திகள்

20 ரூபாய் நாணயம் அறிமுகம்….நிர்மலாசீதாராமன்..!!

1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படும் என்றார் .குடிநீர் ,சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும் .

Image result for 20 rupees coin

வரி வருவாய் 6.3 லட்சம் கோடியில் இருந்து 11.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது, பொறுப்பாக அரசின் வளர்ச்சிக்காக வரி செலுத்தும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.பார்வையற்றோரும் எளிதில் கண்டறியும் விதமாக 1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும்.

Categories

Tech |