Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா-பாண்டிராஜ் படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்… யார் தெரியுமா?…!!!

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் . மேலும் சரண்யா பொன்வண்ணன் ,தேவதர்ஷினி, சத்யராஜ் ,திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார் . தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‌.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி  நடிகர் சூரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மீண்டும் சன் பிக்சர்ஸ்-பாண்டிராஜ் கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த வெற்றிக் கூட்டணியில் நானும் இருப்பது மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார் . ஏற்கனவே சூரி நடிகர் சூர்யாவுடன் அஞ்சான் ,சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |