Categories
தேசிய செய்திகள்

“சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதியம்” நிர்மலா சீதாராமன் தகவல்…!!

பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என்ற பெயரில்  சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதிய திட்டம் வழக்கப்படுமென்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார்.

Image result for "சில்லறை வணிகம்

இதில் 3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும்  வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இதனால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |