Categories
உலக செய்திகள்

இப்படி செய்யாதீங்க… இவங்களுக்கு தொந்தரவா இருக்கும்…மீறி செஞ்சா தண்டனை நிச்சயம்… சுவிஸ் வனத்துறையினர் எச்சரிக்கை…!

பறவைகள்,விலங்குகள் இருக்கும் இடத்தில் பனிச்சறுக்கு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்தில் வழக்கமாக பனிச்சறுக்கு விளையாடும் காலகட்டத்தை தவறவிட்ட பலர் தற்போது பனிச்சறுக்கு விளையாட வருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பனிக்காலத்தில் சரியான உணவில்லாமல்,கொழுப்புகள் எல்லாம் கரைந்து போன நிலையில் விலங்குகளும் பறவைகளும் மீண்டும் இரைதேட வெளியே வரும்.

அப்படி உணவு தேடி வரும் உயிரினங்களுக்கு , பனிச்சறுக்கு விளையாட செல்வோர்கள் தொந்தரவாக இருக்கக் கூடும் என்பதால்,அது பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று சுவிஸ் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே உயிரினங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் பனிச்சறுக்கு செய்வதை தவிர்க்குமாறும், இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |