Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்டா வரச்சொல்லுங்க’… தனுஷின் ‘கர்ணன்’ முதல் பாடல்… படக்குழு அறிவிப்பு…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக  வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . இயக்குனருக்கு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால் கவுரி , யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . வி கிரேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் .

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தேதியை பஸ்ட் லுக் போஸ்டருடன் படக்குழு வெளியிட்டது. அதில் வருகிற ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது . இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் ‘கண்டா வரச்சொல்லுங்க’ என்ற முதல் பாடலை நாளை இரவு 8 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |