நாம் தமிழர் கட்சியில் விலகி திமுகவில் இணைந்த பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், 2016க்கு முன்னாடி சீமான் இருந்த கொள்கை வேற, இப்போ இருக்கிற கொள்கை வேற. நாம் தமிழர் கட்சியில் 2016நிறைய இளைஞர் வந்து சேர்ந்தார்கள். ஆனால் இப்பொழுது பணம் இருப்பவர்களும், ஜாதிய அடிப்படைகளை மட்டும்தான் பொறுப்பு போடுகின்றார்கள். இதனால் தான் நாங்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறினோம்.
வரும் காலங்களில் ஆளும் கட்சி திமுக என்பதால் இதில் இணைகின்றோம். நாம் தமிழர் கட்சியில் நாங்கள் இழந்தது அதிகம் தான். நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பா ஏதாவது செய்வாங்க என்று நினைத்துதான் நாங்கள் போனோம். ஆனா இப்போது இருக்கிற பொறுப்பாளர்களை எல்லாம் நீக்கிட்டு, புதிய பொறுப்பாளர்கள் போடுகின்றார்கள்.
இதுக்கு மேல நாம இருந்தா மரியாதை கிடையாது, என்று நாங்களே வெளிலே வருகிறோம். 2009இல் பயணிக்கும் பொழுதெல்லாம் கட்சிக்காக தன்னுடைய மனைவி தாலியை வைத்துள்ளேன். கட்சிக்கு உண்மையா உழைத்து இருக்கேன். ஆனால் எங்களை ஓரம் காட்டுகிறார்கள்.கட்சியின் பொதுச் செயலாளர் ரொம்ப வன்மையாக பேசுவாரு.
ஒருநாள் இரவு அழைத்து பேசும் போது நீ என்ன பெரிய **** ? என ஏடாகூடமா பேசினார, மரியாதையை இல்லாமல் பேசினார். அப்போதே நான் நினைத்தேன். என்ன இப்படியெல்லாம் பேசுறாங்க என்று. நான் பிச்சை எடுக்க வரவில்லை.வேலை செய்கிறேன், என்னுடைய உணர்வை வெளிப்படுத்தும் போது, அதற்க்கு மதிப்பு கொடுக்காமல் மரியாதையை இல்லாமல் பேசும்பொழுது தான் கோவம் வருது என திமுகவில் இணைந்த ஒரு பொறுப்பாளர் பேசினார்.