நடிகர் கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினியாக நடித்த பிரபல நடிகை 40 வயதில் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.
கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யபட்டு வெளியானது. இதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த இந்தி நடிகை தியா மிர்சா. இவருக்கு சாஹித் சாங்கா என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.
இப்போது தியா மிர்சா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தனது 40 வயதில் முடிவெடுத்துள்ளார். மும்பையில் முன்னணி தொழிலதிபரான வைபவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரின் திருமணமும் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் மிக எளிய முறையில் நடைபெற்றது.பின்னர் சமூகத்தில் வலை தளத்தில் வெளியான இவர்களின் திருமணபுகைப்படத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.