சென்னை வந்த சசிகலா ஒரு வாரமாக வெளியில் தலைகாட்டததால் உளவுத் துறையினர் அவர்மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பிப்ரவரி 9ஆம் தேதி சென்னைக்கு வந்து டி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கினார். தற்போது அவர் வீட்டில் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் உளவுத்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் சென்னை வந்து வீட்டிற்குள் சென்ற சசிகலா ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் வெளியில் தலை காட்டவில்லை. சென்னை வந்த சசிகலா தஞ்சையில் உள்ள தனது கணவரின் நினைவிடத்திற்கு செல்லவிருப்பதாகவும்,மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு செல்லவிருப்பதாகவும் திட்டமிட்டு இருந்தார். அதன்பிறகு மக்களை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.
மேலும் சில சுப நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் கடந்த வாரம் முழுவதும் வெளியில் வராமல் இருப்பது உளவுத் துறையிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆனால் சசிகலாவின் வீட்டிற்கு விவேக் உள்ளிட்ட உறவினர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் சசிகலா இங்கே தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் உளவுத்துறையின் சந்தேகம் அதிகரித்துள்ளது. ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் ராஜம்மாள் என்பவர்தான் சமையல் செய்து வந்துள்ளார். அவரின் சமையல் சசிகலாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் சசிகலா சிறைக்குச் சென்ற போதிலும் ராஜாம்மாவிற்கு மாதமாதம் சம்பளத்தை தருமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சசிகலா தற்போது வீட்டிற்கு வந்தவுடன் ராஜம்மாள் அவரை சந்தித்துள்ளார்.மேலும் உங்களுக்கு இனி நானே சமைத்து தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறினார். அதன்படி சசிகலாவும் சரி என்று கூறியுள்ளார். இதனால் பெரிய பெரிய டிபன் கேரியர்களில் ராஜம்மாள் தினமும் சசிகலா வீட்டிற்கு சாப்பாடு எடுத்துச் செல்கிறார்.
இதனால் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும், கேரியர்களில் கொண்டு செல்வது உணவுதானா என்றும், சசிகலா தங்களது கவனத்தை திசை திருப்பி விட்டு வெளியூர் சென்று விட்டாரா என்றும் உளவுத் துறையினர் சந்தேகிக்கின்றனர்.