Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அமைச்சர் சொன்னா… யாரும் கேட்க மாட்டாங்க…. அரசு விழாவில் அமைச்சர் அதிருப்தி …!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நடந்த அரசு விழாவில் அமைச்சரை அதிமுக மாவட்ட செயலாளர் மட்டம் தட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் கூட்டத்தின் போது செல்போனில் பேசிய தொண்டரை கண்டித்தார். பின்பு அமைச்சரை விட தனது பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறினார்.

அப்போது தூசி மோகன், திருமலை என்னையா செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறாய். செல்லை உள்ளே வை. மாணவர்கள் ஆசிரியர்கள் சொன்னால் எப்படி கேட்பீர்களோ அதேபோல நான் சொன்னால் தான் தொண்டர்கள் கேட்பார்கள், அமைச்சர் சொன்னால் கூட கேட்க மாட்டார்கள் என அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே கூறினார்.

அமைச்சர் பின் முன்னிலையிலேயே தனது செல்வாக்கை காட்டும் வகையில் மாவட்ட செயலாளர் பேசியதைக் கண்டு அமைச்சரும் அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு திட்டமிடப்பட்ட நேரத்தை விட 3 மணி நேரம் தாமதமாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்றுள்ளார். இதனால் நிகழ்ச்சிக்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சியுடன் திரும்பினர்.

Categories

Tech |