Categories
உலக செய்திகள்

அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை… பிரபல நாட்டின் “சூப்பர்” திட்டம்… சுகாதார அமைச்சர் அறிவிப்பு….!

ஜெர்மனில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென் ஸ்பான் அறிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஆகும் முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதால் அன்றாட வாழ்வில் பாதுகாப்பான ஒரு உணர்வை பொதுமக்கள் உணர்வார்கள். குறிப்பாக பள்ளிகள் மற்றும் குழந்தை காப்பகங்களுக்கு இது பெரிதும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |