இங்கிலாந்தில் வாட்ஸ்அப் செய்தியை நம்பி 4 நாட்களாக தாயும் மகளும் சிறுநீரை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இதற்கு மத்தியில் கொரோனா விரட்டியடிக்க இதையெல்லாம் செய்தல் என்று பல போலி தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறு நீர் குடித்தால் கொரோனா போய்விடும் என்று வாட்ஸ்அப் மூலமாக பரவிய வதந்தியை நம்பி இங்கிலாந்தை சேர்ந்த தாயும் மகளும் சிறுநீரை குறித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. லண்டனை சேர்ந்த தாயும் மகளும் கொரோனா தடுப்பூசி ஆபத்தானது என்றும் பாரம்பரிய முறைப்படி சிறு நீரை குடித்தால் கொரோனா போய்விடும் என்ற வதந்தியை நம்பி 4 நாட்கள் தொடர்ந்து சிறுநீரை குடித்து வந்துள்ளனர்.