கோவில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மீகம் ஒரு சிலருக்கே தெரியும்.
அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என பலருக்கு தெரியாது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை கலசங்களுக்கு கொடுக்கின்றன.
நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், எள் ஆகிய நவதானியங்களை கலசங்களில் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால், “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. மேலும், பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.
அதனை, இன்று பல கோவில்களில் சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான காரணத்தை தேடினால், கலசங்களில் உள்ள தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கும். அதன் பின்பு அது செயல் இழந்து விடுவதாக இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. பண்டைக் காலத்தில் தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் மழை பெய்யுமாம், ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? என எண்ணிய நம் முன்னோர்கள் உயரமான கோபுரத்தை கட்டி இடியில் இடிமின்னலில் இருந்து மக்களை காப்பாற்றிய அதே வேளையில், பெரு வெள்ளம் ஏற்படும் நிலையில் கோபுர கலசத்தில் வைத்திருந்த தானிய வகைகளை மீண்டும் எடுத்து பயிர் செய்தனர்.
மேலும், கோபுரம் உயரமாக இருப்பதால் அது தான் முதலில் இடி மின்னல் தாக்கும். அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். ஒரு கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால், நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள். சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை இடி மின்னலிலிருந்து பாதுகாக்கும். இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது.
இதனையே நம் முன்னோர்கள் “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பின்பற்றியே பின் நாட்களில் இடிதாங்கி கண்டு பிடிக்கப்பட்டு உரிமை கொண்டாடினர் மேற்கத்திய நாட்டினர்.