உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபி என்ற முகநூல் பக்கத்தில் வெளியான சுட்ட தோசை பறக்கவிடும் நபர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரோட்டோர கடை ஒன்றில் தோசை சுடும் நபர் தன்னுடைய கடையின் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக தோசையை கொண்டு சென்று வழங்காமல், நின்ற இடத்திலிருந்து தட்டிற்கு தோசையை பறக்கவிடுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இப்படி செய்வது சரிதான் என்றாலும் நாம் சாப்பிடும் உணவு தகுந்த மரியாதை வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
https://twitter.com/i/status/1360254700671574017