Categories
மாநில செய்திகள்

பாலின் விலை உயர்வு…பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!!

சட்ட பேரவை கூட்டம் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 28ல் சட்டப்பேரவை தொடங்கி மானியாக்   கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.இதை தொடர்ந்து  இன்று நடைபெற்ற நீர்வளம்,பால்வளம்,  கால்நடை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தினால், நுகர்வோருக்கும் பால் விலையை உயர்த்த நேரிடும் என்று தெரிவித்தார்.

Image result for பால்

மேலும் பால் விலையை உயர்த்துவதற்கு திமுகவிற்கு சம்மதமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்கு முன் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பாலின் விலை அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |