புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்ததாக மாற்ற திட்டம் உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது.
உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை யில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும்.