தனக்காக கோவில் கட்டிய ரசிகர்களிடம் நடிகை நிதி அகர்வால் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை நிதி அகர்வால் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ மற்றும் ஜெயம் ரவியின் ‘பூமி’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .இந்த இரண்டு படங்களுமே பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது . மேலும் ஒரே நாளில் இரண்டு படங்களில் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது . கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
🙏🏼😊✨🤍 #grateful pic.twitter.com/Eay1mvxrzW
— Nidhhi Agerwal (@AgerwalNidhhi) February 17, 2021
இந்நிலையில் இதையறிந்த நடிகை நிதி அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘என் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் இந்த அளவற்ற அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன் . என் ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள் . என் ரசிகர்கள் எனக்காக கட்டும் கோவிலை ஏழைகளின் இருப்பிடம் , உணவு மற்றும் கல்விக்காக பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.