Categories
அரசியல் மாநில செய்திகள்

இவரு முதல்வரா ? அதை அவுங்க சொல்லணும்…. வம்பிழுக்கும் டிடிவி… கடுப்பில் எடப்பாடி …!!

கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலில் எப்படி செய்யப்பட்டோமோ, அப்படி செயல்படுவோம். வேட்பாளர்கள் யார் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் தீர்மானித்து தேர்தல் பணியை மேற்கொள்வோம். தேர்வுக்கு எப்படி மாணவன் தயாராக இருப்பானோ அதே மாதிரி எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராயிட்டு இருக்காங்க. எல்லா பணிகளும் படிப்படியாக  நடக்கும்.

சசிகலாவே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து சொல்வார். தேர்தல் பிரசாரத்துக்கு வருவது பற்றியோ, அரசியல் நடவடிக்கை குறித்தோ அவர் பேசுவார். யார் முதல்வர் என்று மக்கள்தானே தீர்மானிக்கனும். ஏதோ 1 இல்லை 2கட்சி சேர்ந்தோ அல்ல அவர்களுடைய தொடர்கள்  சேர்ந்து  முதல்வர் யார் என்று தீர்மானித்து விட முடியுமா ? அவங்களுடைய தொண்டர்களோடு தீர்மானிக்க முடியுமா ?அதனால மக்கள் தான் தீர்மானிப்பாங்க. வெய்ட் பண்ணி பாருங்க  எல்லாம் தெரியும்.

அமமுக கட்சியை ஆரம்பிச்சதே அதிமுகவை  மீட்டெடுக்க தான். ஜனநாயக முறையில் சட்டப் போராட்டத்தை நடத்தி அதிமுகவை மீட்டெடுப்போம் என சசிகலா சொல்லுகிறார்கள். ஒற்றுமையாக இருக்கணும் என அம்மாவின் தொண்டர்களுக்கு சசிகலா சொல்கிறார்கள்.  தமிழ்நாட்டு மக்கள் தேர்தல்ல பழனிச்சாமி ஆட்சி எப்படி இருக்குதுனு பதில் சொல்லுவாங்க. அவங்க தான் சர்டிபிகேட்  கொடுக்கணும் என தெரிவித்தார்.

Categories

Tech |