துபாய் இளவரசியான லதீபா தனது தந்தையாலே கடத்தப்பட்டது குறித்து தற்போது அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது.
இளவரசி லதீபா என்பவர் துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் 6 மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த முப்பது பிள்ளைகளில் ஒருவராவார். கடந்த 2018 ஆம் ஆண்டு லதீபா தனது நண்பர்களுடன் துபாயைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.அதை அறிந்துக்கொண்டு மன்னரின் உத்தரவின்படி அவரை மயக்க ஊசி போட்டு அமீரக போலீசார் கடத்தி ஒரு வீட்டில் அடைத்துள்ளனர் .
லதீபா அந்த அறையில் எங்கிருந்தோ ஒரு மொபைலை எடுத்து அதில் வீடியோக்களை பதிவு செய்து தன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இளவரசியின் நிலை குறித்து பிரிட்டன் கேள்வி எழுப்பியதுடன் அவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலியுறுத்தியுள்ளது.
மேலும் இளவரசி லதீபா கடத்தப்பட்டு வீடு ஒன்றில் சிறைவைக்கபட்டிருப்பதை கேள்விப்பட்ட மக்கள் அவர் உயிருடன் இருக்கிறாரா ? என்று கேட்க மாட்டார்களா ? என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் கூறியுள்ளார். லத்தீபாவின் பிரச்சனை அமீரகத்துக்கு மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். லத்தீபாவின் பிரச்சனையை ஐக்கிய நாடு சபையும் அமீரகத்திடம் கேள்வியெழுப்ப போவதாகவும் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது.