மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிகபட்சமாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இந்த முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில் , பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம்.பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், ‘பாரத் நெட்’ என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.