நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ . இந்தப் படத்தில் ரித்து வர்மா ,ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ,சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தாமதமாகி சமீபத்தில் தான் நிறைவடைந்தது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . அதாவது இந்தப்படத்தின் எஞ்சியுள்ள பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க உள்ளது . மேலும் தற்போது மணிரத்தினத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வரும் விக்ரம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளார் . இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.