Categories
பல்சுவை

மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவர்… தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்… சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு…!!

சத்ரபதி சிவாஜி என அழைக்கப்படும் சிவாஜி சதாஜி போஸ்லே அவர்கள் 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சிவநெறி கோட்டை என்று இடத்தில் சகாஜி போஸ்லேவிற்கும் ஜிஜா பாயிற்கும் மகனாகப் பிறந்தார். மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்திரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாகவும் சிறந்த ஆட்சியாளராகவும் நிர்வாகியாகவும் மற்றும் வல்லமை பெற்ற  படை தளபதியாக விளங்கியவர்.

Image result for chatrapati shivaji images

ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து போர்களில் கொரில்லா யுக்திகளைப் பயன்படுத்தி பல கோட்டைகளையும் பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாறு பொற்காலமாகக் கருதப்படுகிறது. தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி இளமையிலேயே ராமாயணம், மகாபாரதம் போன்ற வீர காவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். 1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில் மொகலாய படைத்தளபதி கர்த்தால கான் என்பவருடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர் பிறகு சாய்ஸ்தான் தலைமையில் மேற்கொண்ட தாக்குதளை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார்.

Image result for chatrapati shivaji images

1664 மற்றும் 1670-களில் இரண்டு முறை சுரத்தை காட்டி கொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றி தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்து சிவாஜியை கொலை செய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி புலி நகத்தை பயன்படுத்தி தப்பினர். அதன்பிறகு 1670-ல் முதலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர் பல பகுதிகளை கைப்பற்றினார். போர்க்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் கொரில்லா போர் அதாவது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவதாகும்.

Image result for chatrapati shivaji images

இம்முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும் பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார். 1674 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ராய்கத்கோட்டையில் சத்ரபதியாக முடி சூட்டிக்கொண்டார். 1676 ஆம் ஆண்டு தென்னிந்திய பகுதிகளில் மீது தன் கவனத்தை திருப்பிய அவர் வேலூர், செஞ்சி கோட்டை மற்றும் ஆற்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். சிறந்த ஆட்சியாளராகவும் நிர்வாகியாகவும் விளங்கிய சத்திரபதி சிவாஜி அவர்கள் இறுதியில் இரத்தபோக்கு நோயினால் பாதிக்கப்பட்டு 168௦ ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தன்னுடைய 53வது வயதில் காலமானார்.

Categories

Tech |