பிரபல தமிழ் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். அஜித்தின் தற்போதைய புதிய படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் சண்டைக்காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. அந்த சண்டைக் காட்சிகளை வெளிநாட்டில் எடுப்பதாக உள்ளனர். அஜித்தின் அடுத்த படத்தையும் வலிமை பட இயக்குனர் ஹெச் .வினோத் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னை ரைபில் கிளப்பிற்கு அஜீத் வந்த போது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மொட்டையடித்து புது லுக்கில் இருக்கும் அஜித் காவல்துறையினர் மற்றும் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
நடிகர் அஜித் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்.இந்நிலையில் புகைப்படம் எடுத்து கொண்டது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது .