தோசையை தோசை கல்லில் சுட்டுதான் பார்த்திருப்போம். ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் தோசை கல்லில் இருந்து தோசை பறக்கிறது.
மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் விறுவிறுப்பாகத் தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே தோசையை வீசுகிறார். ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிரப்பட்ட, இந்தப் பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் போட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக இப்படி செய்தாலும், உணவைப் பறக்கவிடுவது அவமரியாதையென நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
https://twitter.com/Sureka5670/status/1360254700671574017